ஃப்ரீடம் 251 மலிவுவிலை மொபைல் என்ன ஆச்சு?

சில மாதங்களுக்கு முன் பரபரப்பாக இந்தியா முழுவதும் பேசப்பட்ட ஃபிரீடம் 251 மொபைல் நினைவிருக்கிறதா? ஒருவேளை மலிவுவிலை மொபைலுக்கு ஆசைப்பட்டு புக் செய்து பின்னர் மறந்துவிட்ட பல லட்சக்கணக்கானோரில் நீங்களும் ஒருவராக இருக்கலாம்.
இந்த மொபைலை தயாரிக்கு ரிங்கிங் பெல்ஸ் என்ற நிறுவனம் கடந்த ஜூலை மாதம் வெறும் 5000 பேருக்கு மட்டும் ஃப்ரீடம் 251 போன்களை டெலிவரி செய்துவிட்டு கப்சிப் என்று அடங்கிவிட்டது. என்ன ஆச்சு என்று போய் பார்த்தால் அந்த நிறுவனம் ஃப்ரீடம் 251 மொபைக்லளை தயாரிக்கும் முயற்சியை கிடப்பில் போட்டுவிட்டு ஒன்றுமே நடக்காதது போல டிவி மற்றும் மற்ற ஸ்மார்ட்பொன்கள் தயாரிப்பில் மும்மரமாக இறங்கிவிட்டது.
இதுகுறித்து ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்திடம் வினவியபோது விரைவில் 65,000 போன்களை கேஷ் ஆன் டெலிவரியில் புக் செய்தவர்களுக்கு வழங்கவிருப்பதாக தெரிவித்தது. ஆனால் அந்த “விரைவில் ” என்பது எப்பொழுது என்று சொல்லப்படவில்லை. ஆனால் உண்மையில் அந்நிறுவனம் வாக்களித்தபடி இவ்வாண்டு ஜூன் மாதத்தில் சுமார் 25 லட்சம் போன்களை டெலிவரி செய்திருக்க வேண்டும். இத்தனைக்கும் இந்த போனை பதிவு செய்தவர்கள் மொத்தம் 7 கோடிப்பேர் என்பது குறிப்பிடதக்கது.
இந்த போன் அறிவிக்கப்பட்டபோது இதெல்லாம் சாத்தியமே இல்லை என்று விஷயமறிந்தவர்கள் பலர் பதிவு செய்யாமல் விட்டுவிட்டனர். ஆனால் மலிவு விலையில் ஒரு ஸ்மார்ட்போன் கிடைப்பதை ஏன் விட வேண்டும் என பதிவு செய்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் அறிவித்த வசதிகளுடன் கூடிய ஒரு போனை மிக மலிவு விலைக்கு உருவாக்க வேண்டும் என்றாலே அதற்கு குறைந்தது 2000 ரூபாயாவது ஆகும் ஆனால் 2000 ரூபாய்க்கு செய்து அதை 251 ரூபாய்க்கு விற்பது சாத்தியமா என்பதை நாம் சிந்திக்க வேண்டாமா என்று கேட்கிறார்கள் விபரமுள்ள மார்க்கெட் ஆய்வாளர்கள்.
வெறும் $4-க்கு உலகிலேயே மலிவான ஸ்மார்ட்போன் என்ற விளம்பரப்படுத்திய போது வெளிநாடுகளில் இருந்தவர்கள் ஆச்சரியத்தில் வாயை பிளந்தார்கள். பெரிய இந்திய உடகங்கள்கூட இதை “மிரக்கிள் டிவைஸ்” என்று வர்ணித்தன. ஆனால் தற்பொழுது சர்வதேச அரங்கில் இந்தியாவின் மானத்தையே கப்பலேற்றியிருக்கிறது இந்த ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம். பத்தாததற்கு மொபைலின் திரையில் நம் நாட்டு கண்ணியத்துக்குரிய தேசியக் கொடியையும் போட்டு அவமானப்படுத்தியிருக்கிறது.

201
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: