அமீர் கான் மனைவியின் ரூ.53 லட்சம் நகை மாயம்

பிரபல பாலிவுட் நடிகர், அமீர் கானின் மனைவியும், தயாரிப்பாளர், இயக்குனருமான கிரண் ராவின் வீட்டிலிருந்த, 53 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் மாயமாகி உள்ளதாக, போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. பிரபல பாலிவுட் நடிகர், அமீர் கான் மற்றும் அவரது மனைவி கிரண் ராவ், மும்பையின் கார்டர் ரோடு வீட்டில் வசித்து வருகின்றனர்.கிரண் ராவின் பாந்த்ரா வீட்டில் இருந்த, 53 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, வைர நெக்லஸ் மற்றும் வைர மோதிரம் காணாமல் போனதாக, போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, அவரது வீட்டில் வேலை பார்க்கும் மூவரிடம், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

160
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: