அரவிந்த்சாமி படத்தை தவிர்த்த சாந்தினி!

சித்து ப்ளஸ்-2 சாந்தினியும் சில நடிகைகளைப்போன்று ஆரம்பத்தில் கவர்ச்சிக்கு நான் எதிரி என்றுதான் கூறி வந்தார். ஆனால் தற்போது அவரும் கவர்ச்சி கதாநாயகியாக உருவெடுத்து நிற்கிறார். மேலும், தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தற்போது கிட்டத்தட்ட பத்து படங்களுக்கு மேல் நடிக்கும் அவர், சில படங்களில் சிங்கிள் நாயகி என்றபோதும், பல படங்களில் இரண்டாவது நாயகியாகவும் நடித்து வருகிறார்.இந்நிலையில், தற்போது நான் நடித்து வரும் படங்கள் திரைக்கு வரும்போது கோலிவுட்டில் எனக்கென ஒரு கமர்சியல் வட்டம் உருவாகி விடும் என்று கூறும் சாந்தினி, மேல்தட்டு ஹீரோ படங்கள் என்பதை விட வித்தியாசமான கேரக் டர்கள் என்பதில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.
அதன்காரணமாக, செல்வா இயக்கத்தில் அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கும் படத்தில் நடிக்க அவருக்கு ஒரு வாய்ப்பு சென்றது. ஆனால் அவரோ, அந்த படத்தில் நான்கு நாயகிகள் என்கிற விவரமறிந்ததும், அப்படியென்றால் இந்த படம் எனக்கு வேண்டாம் என்று மறுத்து விட்டார். மேலும், தற்போது பல படங்களில் இரண்டாவது நாயகியாக நடித்தபோதும், அடுத்தபடியாக சிங்கிள் நாயகியாக மட்டுமே நடிக்கும் முடிவில் இருக்கிறேன். இந்த நேரத்தில் நான்கு நாயகி கதைகளில் நடித்தால் நான் எதிர்பார்க்கிற இடம் கிடைக்காது என்று அந்த படத்தை தவிர்த்து விட்டார் சாந்தினி.

169
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: