ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை அரசாணை: விளம்பரபடுத்த ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ‘தமிழகத்தில் அரசு நிலங்களை ஆக்கிரமித்துள்ளவர்கள் மீதான நடவடிக்கை குறித்த அரசாணையை விளம்பரப்படுத்த வேண்டும்’ என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி, வழக்கறிஞர் வி.பி.ஆர்.மேனன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கில் தமிழகத்தில் காலியாக உள்ள இடங்கள், ஆக்கிரமிப்பில் உள்ள இடங்களின் நிலவரம் குறித்த பட்டியலை தாக்கல் செய்யும்படி சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது.இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை குறித்த அரசாணையை தமிழக அரசு விளம்பரப்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

191
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: