ஆக்ரா-லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையில் போர் விமானங்கள் தரையிறக்கி சோதனை

ஆக்ரா: உ..பி.,யில் புதிய எக்ஸ்பிரஸ் சாலை திறப்பு விழாவில் போர் விமானங்கள் தரை இறக்கம் செய்து சோதனை நடத்தப்பட்டது. உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரோ-லக்னோ இடையே 302 கி.மீ. தொலைவுக்கு ரூ.13,200 கோடி செலவில் எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகவும் நீண்ட தூர எக்ஸ்பிரஸ் சாலையான இச்சாலை திறப்பு விழா இன்று நடந்தது. விழாவை அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் துவக்கி வைத்தார். விழாவில் மூத்த அமைச்சர்கள், விமானப்படை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவின்போது இந்திய விமானப்படைக்கு சொந்தமான 6 போர் விமானங்கள் வரிசையாக தரையிங்கின. விழாவில் பங்கேற்ற பொதுமக்கள் விமான தரையிறங்கியதை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.போர் உள்ளிட்ட அவசரகாலங்களில் போர் விமானங்களில் நெடுஞ்சாலையில் இறக்குவதற்காக இந்த சோதனை நடந்தது.
இதே போன்று கடந்த ஆண்டு யமுனா எக்ஸ்பிரஸ் சாலையிலும் இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் தரையிறக்க சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.தெரு நாய் இடையூறுநெடுஞ்சாலையில் போர் விமானங்கள் அடுத்தடுத்து தரையிறங்கின. அப்போது தெரு நாய் ஒன்று விமானத்தை விரட்டி வேகமாக ஓடியது. இதனை அங்கிருந்தவர்கள் வேடிக்கை பார்த்தனர்.சிறப்பம்சங்கள்* நாட்டின் மிகவும் நீளமான நெடுஞ்சாலை; 302 கி.மீ. நீளமுடையது.* டில்லி- லக்னோ இடையே பயண நேரம் ஒன்றரை மணிநேரம் குறையும்.* போர் விமானங்கள் இறங்க கூடிய வசதி.* பனிப்பொழிவின் போது போக்குவரத்தை சீரமைக்கும் தானியங்கி வசதி.

187
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: