இந்தியாவிடம் தோற்ற வேகத்தில் துபாய் ஓடுகிறார்கள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள்!

மொகாலி: இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவிய நிலையில், ஓய்வுக்காக அந்த அணி வீரர்கள் துபாய் செல்கிறார்கள்.
3வது டெஸ்ட் போட்டி மொகாலியில் 4வது நாளே முடிவுக்கு வந்தது. இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. இந்த நிலையில், 4வது டெஸ்ட் போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் டிசம்பர் 8ம் தேதி தொடங்குகிறது. கடைசி டெஸ்ட் போட்டி 16ம் தேதி சென்னையில் தொடங்கும்.
இன்னும் ஒரு வாரம் பாக்கியுள்ள நிலையில் இங்கிலாந்து வீரர்கள் துபாய்க்கு சுற்றுப் பயணம் செல்கிறார்கள். எனவே இன்று யுவராஜ் சிங் திருமண நிகழ்ச்சியில் அவர்கள் பங்கேற்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
Source: tamil.oneindia.com
துபாய் பயணம்
அந்த அணி கேப்டன் குக் கூறுகையில், அடுத்தடுத்து டெஸ்ட் போட்டிகளில் ஆடிய எங்களுக்கு கொஞ்சம் ஓய்வு தேவைப்படுகிறது. துபாயிலிருந்து புத்துணர்ச்சி பெற்று வருவோம். பெரும்பாலான வீரர்கள் துபாய் செல்கிறோம். ஓய்வு பெற்றால் எங்களால் மேலும் சிறப்பாக ஆட முடியும் என்று நம்புகிறோம் என்றார்.

குடும்பத்தோடு குதுகலம்
இங்கிலாந்து வீரர்கள் அவர்களின் குடும்பத்தாரோடு 5 நாட்கள் துபாயில் சுற்றி பார்க்க அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். கிரிக்கெட் பற்றிய நினைவின்றி, மனதை ரிலாக்ஸ் செய்ய இந்த டூர் உதவும் என்று நம்பிக்கை தெரிவித்தார் கேப்டன் குக்.

பிட்ச்சை சொல்லி குற்றமில்லை
மேலும் குக் கூறுகையில், இந்திய பிட்ச் விளையாட முடியாத அளவுக்கு மோசமாக இல்லை. இந்திய வீரர்கள் இந்த சூழ்நிலைக்கு ஏற்ப துல்லியமாக பந்து போடுகிறார்கள். ஆனால் இங்கிலாந்தின் டாப்-ஆர்டர் பேட்டிங்தான் சரியில்லை. மொகாலியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்தும், டாப்-ஆர்டர் சொதப்பலால் வெற்றி பெற முடியவில்லை.

மும்பையில் பார்க்கலாம்
அடுத்த போட்டி நடைபெற உள்ள மும்பை மைதானத்தில், பந்துகள் பவுன்சாகவும், சுழன்றும் வரும் என எதிர்பார்க்கிறேன். வழக்கமாக அந்த பிட்ச் அப்படித்தான் இருக்கும். பாக்கி, இரு டெஸ்டுகளில் வென்றால்தான், தொடரை டிரா செய்ய முடியும். இவ்வாறு குக் தெரிவித்தார்.

238
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: