இந்தியாவில் கருப்புப் பணம் இனி இல்லை: அருண் ஜேட்லி

புது தில்லி,
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தன்னுடைய முகநூல் பக்கத்தில் “இந்தியாவில் கருப்புப் பணம் இனி இல்லை’ என்ற வாசகம் அடங்கிய புகைப்படத்தை பதிவேற்றம் செய்துள்ளார்.

கருப்புப் பணத்தை ஒழிக்கும்வகையில், பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8-ஆம் தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தார். இந்த திடீர் நடவடிக்கை சரியா? தவறா? என்பது குறித்து நாடு முழுவதும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, தன்னுடைய முகநூல் முகப்பு பக்கத்தில் புதிய படத்தை பதிவேற்றம் செய்துள்ளார். அதில் “இந்தியாவில் கருப்புப் பணம் இனி இல்லை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் முகநூல் பதிவில் மேலும் குறிப்பிடுகையில், நேர்மை, ஒற்றுமை மற்றும் நன்னடத்தை ஆகியவைதான் இந்தியாவின் வளர்ச்சிக்குத் தேவையானவையாகும் என்று கருத்தை பதிவு செய்துள்ளார்.

169
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: