இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு!

ஜம்மு: எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதிகளில் அமைந்துள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் இன்று காலை கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியது.
ஜம்மு காஷ்மீரின் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதி மாவட்டங்களான பூஞ்ச் மற்றும் ரஜோரி ஆகிய பகுதிகளில், பிம்பேர் கலி,கிருஷ்ண காட்டி மற்றும் நவ்ஷெரா ஆகிய செக்டர்களில் இந்திய நிலைகள் அமைந்துள்ளன.
இந்த நிலைகளின் மீது பாகிஸ்தான் ராணுகுவத்தினர் இன்று காலை 9 மணி முதல் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். அவர்கள் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு மற்றும் ஷெல் எனப்படும் சிறிய வகை குண்டு வீச்சுகளை நடத்தியதாக ராணுவ செய்தி தொடர்பாளர் மனிஷ் மேத்தா தெரிவித்தார்.

227
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: