“ஈட்டி” நடிகரிடம் மல்லுக்கு நின்ற கொடி “வில்லி”

சென்னை: ஏன்… நாங்க நடிக்க மாட்டோமா என்று “ஈட்டி” நடிகரிடம் மல்லுக்கட்டியுள்ளார் கொடியில் வில்லியான நடிகை.

சினி துறையில் பல ஆண்டுகளாக இருக்கார் என்று பேரு இருந்தாலும் அந்த நடிகை முதலிடத்தில் வலுவாக உட்கார முடியலை. காரணம் பெரிய நம்பர் நடிகை அந்த இடத்தில் பெவிக்கால் போட்டு உட்கார்ந்து இருப்பதுதான்.

தற்போது ஈட்டி நடிகருக்கு பிக் சிஸ்டராக ஒரு படத்தில் பெரிய நம்பர் நடிக்கிறார். இது அந்த நடிகைக்கு செம வெயிட் கேரக்டராம். இதை கேள்விப்பட்ட கொடி வில்லி நடிகை கொந்தளித்து போய் இருக்கார்.

ஈட்டி நடிகரை நேரில் சந்தித்த அவர் செமத்தியாக மல்லுக்கட்டாத குறையாக வம்பு இழுத்துள்ளார்.
என்னுடன் எல்லாம் நடிக்க மாட்டீங்களா? அவங்க கூடதான் நடிப்பீங்களா என்று கேட்க… நடிகரோ பரிதாபமாக எனக்கு அக்காவாக தான் நடிக்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறார்.

அப்போதும் விடாத கொடி வில்லி நான் அக்கா வேடத்தில் எல்லாம் நடிக்க மாட்டேனா என்று கேட்டு பெரும் ரகளையே செய்துட்டாராம். என்னடா இது வம்பு என் வீட்டுக்கு வேலியே இல்ல… இந்த ஓணான் இம்புட்டு குடையுதேன்னு நொந்து கிடக்கிறாராம்.

239
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: