ஐ.நா.,வுக்கான அமெரிக்க தூதராக இந்திய வம்சாவளி பெண் தேர்வு

வாஷிங்டன்: ஐ.நா.,வுக்கான அமெரிக்க துாதராக இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.இதுகுறித்து, அமெரிக்க பத்திரிக்கையான வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:தேர்தலில் வெற்றிஅமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தின் கவர்னராக இருப்பவர் நிக்கி ஹாலே, 44. இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். அமெரிக்க அதிபராக தேர்வாகி உள்ள டொனால்ட் டிரம்ப் ஐ.நா.,வுக்கான அமெரிக்க துாதராக நிக்கி ஹாலேவை நியமிக்க உள்ளார். இதையடுத்து, டிரம்ப் நிர்வாகத்தில் இணையும் முதல் பெண் என்ற பெருமை நிக்கிக்கு கிடைக்க உள்ளது. மேலும், அமெரிக்க அரசில் கேபினட் அந்தஸ்தில் நியமிக்கப்படும் முதல் இந்திய வம்சாவளி பெண் என்ற சிறப்பும் அவருக்கு கிடைக்கும்.
செனட் ஒப்புதல் அளித்த பிறகு அவர் அதிகார்பூர்வமாக ஐ.நா.,வுக்கான அமெரிக்க துாதராக நியமிக்கப்படுவார்.இவ்வாறு அந்த பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

200
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: