களத்தில் குதித்தார் மன்னார்குடி வாரிசு.ஜல்லிக்கட்டு ஊர்வலத்தில் பங்கேற்பு

ஜல்லிக்கட்டை இந்தாண்டு நடத்தியே ஆக வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. இதையொட்டி மன்னார்குடியில் நடந்த ஊர்வலத்தை தலைமை தாங்கி நடத்தியிருக்கிறார் சசிகலாவின் அண்ணன் திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த்.
கடந்த சட்டப்பேரவை தேர்தல் சமயத்தின்போது, சென்னையை அடுத்துள்ள திருப்போரூர் தொகுதியில் ஏழை மக்களுக்கு அன்னதானம் வழங்குவது போன்ற நிகழ்ச்சிகளை அவர் நடத்தி வந்தார். இதனால், திருப்போரூர் தொகுதியில் வேட்பாளராக களம் இறங்குவாரோ என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவ்வாறு நடக்கவில்லை.
இந்நிலையில் ஜெயல்லிதா இறுதிச்சடங்கிற்கு பின்னர் பொது நிகழ்ச்சியில் பங்கேற்று ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார் ஜெய் ஆனந்த்.
போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள் ஏராளமானோருக்கு மத்தியில் அவர் பேசியதாவது:- “மாடுகளை கொன்று குவிப்பதை ஒரு சில அமைப்புகள் தவறாக கூறவில்லை. ஆனால் மாடுகளுடன் விளையாடுவதை மட்டும் தவறாக கூறுகின்றன. இதனை மாடுகள் மீதுள்ள அக்கறையினால் கூறுகிறார்களா அல்லது தமிழர்களின் வீரத்தின் மீது பொறாமை கொண்டு இதனை கூறுகிறார்களா என்பதுதான் இன்றைய கேள்வி. தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டை கவுரவித்து அதனை முறைப்படி திருப்பி நடத்த அனுமதிக்க வேண்டும்”. இவ்வாறு அவர் பேசினார்.

174
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: