காற்றழுத்த தாழ்வுநிலை : துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை

சென்னை : வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளது. சென்னையை நோக்கி நகர்ந்து வரும் இந்த புயல் சின்னம் டிசம்பர் 2, 3 ஆகிய தேதிகளில் வேதாரண்யம் அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனையடுத்து புதுச்சேரி, காரைக்கால், கடலூர், நாகை, தூத்துக்குடி, பாம்பன் ஆகிய துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

273
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: