கோபமே எனக்கு வராது… காரணம் என்ன தெரியுமா?- கிசுகிசு ராணி அனுஷ்கா விளக்கம்

படங்கள் ஒப்புக்கொள்வதை நிறுத்திவிட்டார். விரைவில் திருமணம்… என்று அனுஷ்காவை பற்றி கிசுகிசுக்கள் றெக்கை கட்டுகின்றன. இதுபற்றி கேட்டாலோ அனுஷ்கா கூலாக பதில் சொல்கிறார். இன்னும் ஐடியா வரலை. வந்தா உங்ககிட்ட தான் முதல்ல சொல்வேன்…’ என்று.
தென் இந்திய நடிகைகளில் அதிகமாக கிசுகிசுக்கள் பரவியது அனுஷ்காவுக்குத்தான். நாகார்ஜுனா, ராணா, நாகசைதன்யா, ஆர்யா என கிசுகிசு ராணியாகவே திகழ்கிறார். ‘மீடியாக்கள் என்னுடைய பெர்சனல் வாழ்க்கையை பற்றி இஷ்டத்துக்கு எழுதுகிறார்கள்.
இதையெல்லாம் படித்துவிட்டு நான் கோபப்படுவேன் என்று எதிர்பார்க்காதீர்கள். நான் ஒரு யோகா ஆசிரியை. யோகா என்னை கட்டுப்படுத்துகிறது. எனக்கு டென்ஷன் ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறது,’ என்கிறார்.
கட்டிக்கப் போறவர் கொடுத்து வெச்சவர்!

324
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: