சத்ரியன், பிரம்மா உள்ளிட்ட படங்களை இயக்கிய கே.சுபாஷ் காலமானார்

இளைய திலகம் பிரபு நடித்த கலியுகம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் இயக்குநராக காலடியெடுத்து வைத்த, கே.சுபாஷ் (57), சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துமனையில், உடல் நலக்குறைவால் காலமானார்.
இவர் இயக்கிய சத்ரியன், உத்தம புருஷன், பவித்ரா, சுயம்வரம் போன்ற படங்கள் மக்கள் மனதில் இன்றும் நினைவில் நிற்கிற படங்கள்.
தமிழ் மட்டுமல்லாது ஹிந்தியிலும் பிரபலமான கே.சுபாஷ், ஷாருக்கான் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ், தில்வாலே என சில வெற்றி படங்களுக்குக் கதைகளும் எழுதியுள்ளார்.
இவரது தந்தையான இயக்குநர் கிருஷ்ணன் பஞ்சு தான் பராசக்தி படத்தின் மூலம் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது இறுதிச் சடங்கு மாலை 4.30 மணிக்கு நடக்கவுள்ளது.

125
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: