சுங்கச் சாவடிகளில் எளிமையான முறையில் கட்டணம் செலுத்த மத்திய அரசு புதிய திட்டம்

புது தில்லி,
சுங்கச்சாவடிகளில் எளிமையான முறையில் மின்னணு மூலம் கட்டணம் செலுத்துவதற்கு வசதியாக வானொலி அலைகள் (ஆர்எஃப்ஐடி) மூலம் இயங்கும் அட்டையை கார் உள்பட புதிதாக தயாரிக்கப்படும் அனைத்து வாகனங்களிலும் பொருத்துமாறு வாகன உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் சக்திகாந்த தாஸ் கூறுகையில், “கார் உள்பட அனைத்து புதிய வாகனங்களிலும் ஆர்எஃப்ஐடி அட்டையை பொருத்த வேண்டும் என்று வாகன உற்பத்தியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’
இந்த அட்டை மூலம் சுங்கச் சாவடிகளை வாகனங்கள் கடக்கும்போது தானாகவே அதற்குரிய தங்கள் கட்டணம் கழித்துக் கொள்ளப்படும்.
தேவைப்படும்போது இந்த அட்டையில் பணமதிப்பை ஏற்றிக்கொள்ள (ரீசார்ஜ் செய்துகொள்ள) முடியும்.
இதை நடைமுறைப் படுத்துவதன் மூலம் சுங்கச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்க்கலாம்.

230
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: