‘சுஷ்மாவுக்கு எனது கிட்னியை தருகிறேன்’: ஆந்திர எம்.பி

சுஷ்மா ஸ்வராஜுக்கு கிட்னி ஃபெய்லியர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு கிட்னி மாற்று அறுவை சிசிச்சை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆந்திர பிரதேசத்தின் தெலுங்கு தேச கட்சியின் எம்.பி ராயப்பட்டி சாம்ப சிவ ராவ் சுஷ்மாவுக்கு கிட்னி தானம் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிவ ராவ் கூறுகையில், “சுஷ்மாவுக்கு கிட்னி ஃபெய்லியர் என கேள்விப்பட்டு வருத்தமடைந்தேன். எனவே, எனது கிட்னிகளில் ஒன்றை அவருக்கு வழங்க தயாராக உள்ளேன்” என கூறியுள்ளார். முன்னதாக மத்திய பிரதேசத்தின் போக்குவரத்து காவல்துறை அலுவலர் ஒருவரும் சுஷ்மாவுக்கு கிட்னி தர முன்வந்தது குறிப்பிடத்தக்கது.

157
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: