சென்னையில் இன்று முதல் ரூ.500 நோட்டு விநியோகம்

கோவை: ஸ்டேட் பாங்க் வங்கி தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா கோவையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.அதிகரிப்புஅப்போது அவர் கூறியதாவது: வங்கிகளில் கணக்கு இல்லாதவர்கள், உடனடியாக புதிய வங்கிக்கணக்கை துவக்கி தங்களது பணத்தை டிபாசிட் செய்யலாம். கடனுக்கான வட்டி குறைப்பு தொடர்பாக இப்போது கூற முடியாது. வங்கிகளுக்கான முதலீட்டை பெருக்க ரூபாய் நோட்டு வாபஸ் பெறப்பட்டதாக இப்போது கூற முடியாது. புதிய ரூ.500 நோட்டுக்கள், சென்னையில் இன்று முதல் விநியோகம் செய்யப்படும். இவை விரைவில் ஏடிஎம்.,மில் நிரப்பப்பட்டு விரைவில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் செய்யப்படுவது அதிகரித்துள்ளது என்றார்.

235
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: