சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தேர்தல் – இன்று மாலை முடிவு அறிவிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த வழக்கறிஞர் சங்கத் தேர்தல் வாயிலாக, தலைவர், செயலாளர், துணைத் தலைவர், பொருளாளர், இளநிலை, மூத்த செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் தேர்தலுக்கான உறுப்பினர் சேர்க்கையில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும் வழக்கறிஞர் வட்டாரங்கள் குற்றம் சாட்டி வந்தனர். இந்த முறை நடைபெற்றுக் கொண்டிருக்கும் தேர்தலில் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு, நீதிமன்ற வளாகத்துக்குள் துண்டு பிரசுரம் விநியோகம் செய்யக் கூடாது, உணவு பொட்டலங்களை வழங்கி நீதிமன்ற வளாகத்தை அசுத்தம் செய்யக்கூடாது, வழக்கறிஞர்களின் பிரசாரத்தை கண்காணிக்க கேமிரா என ஏக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
வழக்கறிஞர் சங்கத் தலைவர் பதவிக்கு முன்னாள் தலைவர் மோகன கிருஷ்ணன், செயலாளராக இருந்த அறிவழகன், விஜயகுமார், காசி ராமலிங்கம் உள்ளிட்ட ஏழு பேர் போட்டியிடுகின்றனர். செயலாளார் பதவிக்கு சிவசங்கர், இளங்கோவன், கிருஷ்ணகுமார், சசிகுமார் உள்ளிட்ட நான்கு பேர் போட்டியிடுகின்றனர், தலைவர் பதவியைப் போல செயலாளர் பதவியும் செல்வாக்கானது என்பதால் அதற்கும் கடும் போட்டி நிலவி வருகிறது. இந்தப் பதவிக்கு சிவ சண்முகம் உள்ளிட்ட நான்கு பேர் போட்டியிடுகின்றனர்.
இன்று மாலை 6 மணிக்குள் வாக்குகள் எண்ணப்பட்டு, மாலையே முடிவுகள் வெளியாகும்.
– அ.பா.சரவண குமார் (மாணவப் பத்திரிகையாளர்)
படம்: அ. சரண் குமார் (மாணவப் பத்திரிக்கையாளார்)

181
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: