“செய்தது தப்பு…” எழுதி வாங்கிய பிரபல நடிகர், இயக்குனர்… அதிர்ச்சியில் நடிகை

ஐதராபாத்: நான் என்ன சின்னப்பிள்ளையா.. இல்ல இவர்கள் என்ன தலைமை ஆசிரியர், வகுப்பாசிரியரா என்று மனதுக்குள் நொந்து போய் கிடக்கிறாராம் ஸ்ரேயா. என்ன மேட்டர் தெரியுங்களா?

சூப்பர் ஸ்டார் ரஜினி, விஜய், தனுஷ் என்று முன்னணி ஹீரோக்களோடு ஜோடியாக நடித்த ஸ்ரேயா சில வருடங்களாக தமிழ் படங்கள் இல்லாமல் இருந்தார். இப்போது சிம்புவிற்கு ஜோடியாக AAA படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது தெலுங்கில் மூத்த ஹீரோ பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக “கவுதமி புத்ர சடகர்னி” என்ற படத்தில் நடித்து வருகிறார். இங்குதான் இவருக்கு வினை ஆரம்பித்துள்ளது.

படப்பிடிப்பில் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஸ்ரேயா வழக்கம் போல் சகஜமாய் வெளியிட இதை பார்த்த நடிகர் மற்றும் இயக்குனர் பொங்கி எழுந்து விட்டனர்.
அது எப்படி படங்களை வெளியிடலாம் என்று டென்ஷன் ஆகி ஸ்ரேயாவை கண்டித்துள்ளனர்.

அத்தோடு விட்டார்களா? “நான் செய்தது தவறு, இனி இதுபோல் செய்யமாட்டேன்” என எழுதி வாங்கி இருக்கிறார்கள். என்னப்பா நடக்குது… பள்ளிக்கூட சிறுவர்களை போல மன்னிப்பு கடிதம் வாங்க வைத்தது ஸ்ரேயாவை அதிர்ச்சி அடைய செய்துள்ளதாம். அட போங்கப்பா…

257
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: