செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற டிச. 30 காலக்கெடுவை நீட்டிக்கும் திட்டமில்லை: மத்திய அரசு

புது தில்லி: செல்லாததாக்கப்பட்ட ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கிக் கணக்குகளில் செலுத்துவதற்கான டிசம்பர் 30-ஆம் தேதி காலக்கெடுவை நீட்டிக்கும் திட்டமில்லை என்று மத்திய அரசு தெரிவித்தது.
இதுகுறித்த கேள்வியொன்றுக்கு நிதித்துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மாநிலங்களைவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளதாவது:
மத்திய ரிசர்வ் வங்கியிடமும், அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளிடமும் தேவையான அளவு ரொக்கம் கையிருப்பு உள்ளது.
ஏற்கெனவே புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 ரூபாய் நோட்டுகளை வங்கிக் கணக்குகளில் செலுத்துவதற்கான கடைசி தேதி டிசம்பர் 30 என்று விதிக்கப்பட்டிருந்த காலக்கெடுவை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கவில்லை.

ரூ.100 நோட்டுகளின் புழக்கம் கணிசமாக அதிகரித்துள்ளது.
கிராமங்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், அந்தப் பகுதிகளில் ரூ.100 மற்றும் அதற்குக் குறைவான மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை அதிக அளவு விநியோகிக்குமாறு வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று தனது பதிலில் இணையமைச்சர் அருண் ராம் மேக்வால் குறிப்பிட்டுள்ளார்.

135
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: