செல்லா நோட்டுகள் ரூ.4 லட்சம் கோடி டெபாசிட்: ரவிசங்கர் பிரசாத்

புதுதில்லி: மத்திய அரசின் நடவடிக்கையால் இதுவரை ரூ.4 லட்சம் கோடி செல்லாத நோட்டுகள் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
ரூபாய் நோட்டு விவகாரத்தில் தில்லி முதல்வர் கேஜரிவால் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் வெட்கமில்லாத பொய்கள் என்று விமர்சித்த மத்திய அமைச்சர் ரவிசங்கர், கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக புழக்கத்திலிருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியான நவம்பர் மாதம் 8-ஆம் தேதிக்குப் பிறகு, இதுவரை 4 லட்சம் கோடி ரூபாய் செல்லாத நோட்டுகள் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்றார்.
கறுப்புப் பண ஒழிப்புக்காக ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது, பெரு முதலாளிகளுக்குதான் சாகதமாக இருக்கும் என்றும், ரூபாய் ஒழிப்பு திட்டம் முன்கூட்டியே பாஜக தலைவர்களுக்கு தெரியும் என்றும் கேஜரிவால் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

184
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: