ஜன்தன் வங்கி கணக்கு: ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு!

புதுடில்லி :
ஜன் தன் கணக்கு வைத்திருப்போர் பணம் எடுப்பதற்கு ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி மாதம் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும்.
பாரதிய ஜனதா ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அனைவருக்கும் வங்கி கணக்கு என்ற திட்டத்தின் கீழ், பிரதமர் நரேந்திர மோடி ‘ ஜன்தன்’ திட்டத்தை 2014 ஆகஸ்ட் மாதம் 28ந் தேதி தொடங்கினார்.
இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதிலும் 11½ கோடி வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது. ஏழை மக்கள் இத்திட்டத்தின் மூலம் வங்கிகளில் வழங்கப்படும் ஓவர் டிராப்ட் தொகை ரூ.5 ஆயிரத்தை முறையாக திருப்பி செலுத்தினால் ரூ.15 ஆயிரம் வரை கடன் வழங்க வகை செய்யும் வகையில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்ப பட்டது.
ஆனால் கடந்த 8ந்தேதி ரூ.500, 1000 நோட்டுக்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார், அதை தொடர்ந்து பழைய நோட்டுக்களை வங்கிகளில் மாற்றிக் கொள்ளவும் அவகாசம் அளிக்கப்பட்டது.
பிரதமரின் இந்த அறிவிப்பிற்கு பிறகு, ஜன் தன் வைப்பு வங்கி கணக்கில் ரூ.21,000 கோடி டெபாசிட் ஆகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பெரிய பெரிய பண முதலைகள் தங்களிடம் உள்ள கருப்பு பணத்தை, தங்களிடம் வேலை செய்யும், மற்றும் தெரிந்த ஏழைகளின் ஜன் தன் வங்கி கணக்கில் டெபாசிட் செய்திருப்பதாக விசாரணையில் தெரிய வந்தது.
கர்நாடகா மற்றும் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள மக்களின் ஜன்தன் வங்கி கணக்கில்தான் நாட்டிலேயே அதிகளவு பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது..
இதனையடுத்து ஜன் தன் கணக்கில் டெபாசிட் செய்தவர்கள், அந்த பணத்தை எடுக்க ரிசர்வ் வங்கி புதிய கட்டுப் பாடுகளை விதித்துள்ளது.
அதன்படி, ஜன்தன் கணக்கு வைத்திருப்போர் வங்கியில் இருந்து மாதம் ரூ.10,000 மட்டுமே பணம் எடுக்கலாம்.
அதற்கு மேல் பணம் எடுக்க வேண்டுமானால் வங்கி மேலாளரின் அனுமதி பெற வேண்டும்.
கேஒய்சி (kyc) விபரம் தராதவர்கள் ரூ.5000 மட்டுமே எடுக்க முடியும்.
கறுப்பு பணம், ஜன்தன் கணக்கு மூலம் வெள்ளையாக்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி கூறி உள்ளது.
ஜன்தன் திட்டம் ஜீரோ பேலன்ஸ் திட்டம் என்பதால் நாடு முழுவதும் கோடிக்கணக்கானோர் வங்கிகளில் கணக்கு தொடங்கினர். இதன் மூலம் மத்திய அரசின் திட்டங்களுக்கான பணம், வரவு வைக்கப்படும் என பேசப்பட்டது.
பிரதமரின் ரூ.500, 1000 செல்லாது என்று அறிவிப்பதற்கு முன்பு வரை, அதாவது கடந்த நவம்பர் 9ந் தேதி வரை நாடு முழுவதும் உள்ள ஜன்தன் வங்கிக்கணக்கில் வெறும் 45,636 ரூபாய் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

251
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: