டெல்டாவில் மேலும் ஒரு விவசாயி தற்கொலை

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகில் உள்ள பொன்னவராயன்கோட்டை உக்கடை பகுதியைச் சேர்ந்தவர் வைத்திலிங்கம் மகன் மாசிலாமணி (55) விவசாயி. இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகிவிட்டது. மகள் வீட்டில் கடன் வாங்கி 2 ஏக்கர் விவசாய நிலம் குத்தகைக்கு வாங்கி நடவு செய்துள்ளார். காவிரித் தண்ணீர் வராததால் பயிர்கள் கருகிவிட்டது.
இந்த நிலையில் வாங்கிய கடனை எப்படி திருப்பிக் கொடுப்பது என்று தன் வீட்டாரிடம் பேசிக் கொண்டிருந்தவர், எலிக்கு வைக்கும் விஷ மாத்திரைகளை தின்றுவிட்டார்.
அக்கம் பக்கத்தினர் அவரை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பிறகு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தமிழகத்தில் கருகும் பயிர்களைக்கண்டு அடுத்தடுத்து விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும், அதிர்ச்சியில் சாகும் சம்பவங்களும் தொடர்வது விவசாயிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
விவசாயி மாசிலாமணி தற்கொலை செய்து கொண்ட செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இனியும் தமிழக அரசு மவுனம் காப்பது கண்டனத்திற்க்குறியது என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார்.
இரா.பகத்சிங்

191
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: