நடிகர் வடிவேலுக்கு உங்கள் கட்சி நிர்வாகி பணம் கொடுத்தாரா? ஐகோர்ட்டில் மு.க.ஸ்டாலின் பதில்

சென்னை ஐகோர்ட்டில் நடக்கும் தேர்தல் வழக்கில் ஆஜராக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வந்தார்.
கடந்த 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், சென்னை கொளத்தூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் சைதை துரைசாமியும், தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலினும் போட்டியிட்டனர். ஸ்டாலின் வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் சைதை துரைசாமி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை ஐகோர்ட்டு நீதிபதி எம்.வேணுகோபால் விசாரித்து வருகிறார். இந்த வழக்கில் மு.க.ஸ்டாலினிடம், சைதை துரைசாமியின் தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை செய்து வருகிறார். ஏற்கனவே, 2 முறை மு.க.ஸ்டாலின் குறுக்கு விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜராகினார்.
3-வது முறையாக செவ்வாய்க்கிழமை ஐகோர்ட்டில் ஸ்டாலின் ஆஜராகி, குறுக்கு விசாரணைக்கு பதில் அளித்தார்.
கேள்வி:- கொளத்தூர் தொகுதியில் 203 ஓட்டு எந்திரம் பயன்படுத்தப்பட்டதா? 18- வது சுற்றின் முடிவில் 1,700 ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தீர்களா?
பதில்:- ஆமாம்.
கேள்வி:- தெருமுனைக் கூட்டம் நடத்தினீர்களா?
பதில்:- அதுகுறித்து ஞாபகம் இல்லை. ஆனால் நடந்திருக்க வாய்ப்புண்டு.
கேள்வி:- வீதி வீதி, வீடு, வீடாக சென்று பிரச்சாரம் செய்தீர்களா?
பதில்:- குறிப்பிட்ட வீதிகளில் மட்டுமே சென்றேன். வீடு வீடாக செல்லவில்லை.
கேள்வி:- தேர்தலின் போது ஒட்டுமொத்த செலவுகளை செய்தது தி.மு.க.-வா? அல்லது வேறு யார் மூலமாவா?.
பதில்:- செலவுகளை செய்ய கட்சியின் சார்பில் ஒரு உறுப்பினர் நியமிக்கப்பட்டார். அவர் குறித்து தற்போது ஞாபகமில்லை.
கேள்வி:- தேர்தலில் பயன்படுத்திய வாகனம் யாருடையது?
பதில்:- அது என் மகனுடைய வாகனம்.
கேள்வி:- ஜீப் பயன்படுத்தினீர்களா? அது உங்களுடையதா?
பதில்:- ஆமாம் பயன்படுத்தினேன். அது நண்பருடையது.
கேள்வி:- திராவிடர் கழக தலைவர் வீரமணி உங்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தாரா?
பதில்:- ஆம். பிரசாரம் செய்தார்.
கேள்வி:- தேர்தலின் போது உறவினர்கள், ஏஜெண்டுகள் பிரசாரம் செய்த செலவை தாக்கல் செய்துள்ளீர்களா?
பதில்:- ஆமாம் தாக்கல் செய்துள்ளேன்.
கேள்வி:- சுப.வி என்ற சுப.வீரபாண்டியன் உங்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தாரா?
பதில்:- ஆம்.
கேள்வி:- கொளத்தூர் தொகுதியில் உங்கள் மனைவி துர்கா என்ற சாந்தா ஸ்டாலின் பிரசாரம் செய்தாரா?
பதில்:- ஆமாம்.
கேள்வி:- கொளத்தூர் தொகுதியில் ரூ.1 கோடியே 18 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதா?
பதில்:- அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது.
கேள்வி:- உங்களுக்காக நடிகர் வடிவேலு பிரசாரத்தில் ஈடுபட்டாரா?
பதில்:- ஆமாம். பிரசாரம் செய்தார்.
கேள்வி:- தேர்தல் பிரசாரத்திற்காக நடிகர் வடிவேலுக்கு, உங்கள் கட்சியின் நிர்வாகி வி.சி.பாபு பணம் கொடுத்தாரா?
பதில்:- இல்லை
இவ்வாறு குறுக்கு விசாரணை நடந்தது.
இதன்பின்னர் இந்த வழக்கு விசாரணையை புதன்கிழமைக்கு (இன்று) தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
படங்கள்: அசோக்குமார்

196
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: