நியூசிலாந்து டெஸ்ட் தொடர்: பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி

நியூசிலாந்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இரண்டு போட்டிகளை கொண்ட டெஸ்ட் ஆட்டத்தில் விளையாடி வருகின்றது. இதில் முதல் நாள் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் செய்து முதல் இன்னிங்சில் 133 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.
அடுத்ததாக விளையாடிய நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 200 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இரண்டாவது இன்னிங்சில் பாகிஸ்தான் 171 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதை தொடர்ந்து நியூசிலாந்திற்கு வெற்றியிலக்காக 105 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.
இன்றைய ஆட்டத்தில், இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 108 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி பெற்றது நியூசிலாந்து அணி. இதன் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என நியூசிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது.
அடுத்த போட்டியில் பாகிஸ்தான் வென்றால் மட்டுமே டெஸ்ட் தொடரை சமன் செய்ய முடியும்

187
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: