நீதித்துறையை முடக்குகிறது மத்திய அரசு!: நீதிபதிகள் தேர்வுக்குழு குற்றச்சாட்டு

டில்லி:
“நாட்டின் நீதித்துறையை செயல்பட விடாமல் முடக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது. இதை ஒருபோதும் ஏற்க முடியாது” என்று நீதிபதிகள் தேர்வுக்குழு (கொலீஜியம்) குற்றம்சாட்டியுள்ளது.
நாட்டில் உள்ள உயர் நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை நிரப்புவதற்காக, உச்சநீதிமன்ற கொலீஜியம் எனப்படும் நீதிபதிகள் தேர்வுக் குழு 77 பேர் அடங்கிய பரிந்துரைப் பட்டியலை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது.
ஆனால் , இதில் 33 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கிய மத்திய அரசு, எஞ்சிய 43 பேரை நிராகரித்து, உச்சநீதிமன்ற நீதிபதிகள் தேர்வுக்குழுவுக்கு திருப்பி அனுப்பி வைத்தது.
ஆனால், இதனை ஏற்க நீதிபதிகள் தேர்வுக்குழு (கொலீஜியம்) மறுப்பு தெரிவித்துள்ளது.
மேலும், தகுதியான நபர்களை உரிய வகையில் பரிந்துரை செய்துள்ளதாகவும் புதிதாக இன்னொரு பரிந்துரை பட்டியலை அனுப்ப வாய்ப்பில்லை என்றும் அரசுக்கு தெரிவித்துள்ள கொலீஜியம், “நாட்டின் நீதித்துறையை செயல்பட விடாமல் முடக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது. இதை ஒருபோதும் ஏற்க முடியாது” என்றும், குறிப்பிட்டுள்ளது.

190
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: