படம் கல்லா கட்டுவதே எனக்கு கிடைக்கும் விருது… “டச்” செய்த தமன்னா

சென்னை: படம் செமத்தியாக கல்லா கட்டுவதுதான் எனக்கு பெரிய விருது என்று டச்சிங் கமெண்ட் கொடுத்துள்ளார் தமன்னா…

ஆரம்ப காலத்தில் எப்படியோ… இப்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராகி விட்டார் தமன்னா. கதை தேர்வில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதனால் படத்திற்கு படம் இவரது நடிப்பு மேம்பட்டு ரசிகர்கள் மத்தியில் இவரது நடிப்பு திறமை பேசப்படுகிறது.

இந்நிலையில் இவர் சொல்லியிருக்கிறதை பாருங்க… ‘எனக்கு விருதுகள் மீது அதிக ஆர்வம் கிடையாது’. படம் பொருளாதார ரீதியாக வெற்றிப்பெற்றால் தான் அது உண்மையாக வெற்றி.
விருது வாங்குவதற்காக மட்டுமே எடுக்கப்படும் படங்களில் நான் எப்போதுமே நடிக்க மாட்டேன்” என்று சொல்லியிருக்கார்.

240
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: