பாக்., கடல் எல்லைக்குள் இந்திய நீர்முழ்கி கப்பல்?

புதுடில்லி: பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் இந்திய நீர்முழ்கி கப்பல் அனுமதியின்றி நுழைந்ததாக பாகிஸ்தான் கப்பல்படை வெளியிட்ட செய்திக்கு இந்திய கப்பல்படை தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.பாக்., குற்றசாட்டுஇதுகுறித்து, பாகிஸ்தான் கப்பல்படை வெளியிட்ட செய்தி குறிப்பில், ” இந்திய கப்பல்படைக்கு சொந்தமான நீர்முழ்கி போர்கப்பல் பாகிஸ்தானின் தெற்கு கடல் எல்லைக்குள் நேற்று நுழைய முயற்சித்தது. அதை கண்டறிந்து தடுத்து திருப்பி அனுப்பினோம்” என்று தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தில், நீர்முழ்கி கப்பல் வீடியோ ஒன்றையும் அந்நாட்டு அரசு வெளியிட்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில், பாகிஸ்தானின் குற்றசாட்டை இந்திய கப்பல்படை மறுத்துள்ளது.
இதுதொடர்பாக, இந்திய கப்பல்படையின் செய்தி தொடர்பாளர் கேப்டன் டி.கே.சர்மா கூறியதாவது:அப்பட்டமான பொய்பாகிஸ்தான் கப்பல்படை கூறுவது அப்பட்டமான பொய். பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் இந்திய நீர்முழ்கி போர்கப்பல் எதுவும் நுழையவில்லை. இந்திய நீர்முழ்கி போர்கப்பல் பாக்., எல்லைக்குள் நுழைய வேண்டிய அவசியமில்லை. சீனா நுழைந்திருக்கலாம்வடக்கு அரபிய கடல்பகுதி மற்றும் பெர்சியின் வளைகுடாவில் இருந்து பல்வேறு நாடுகளை சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட கப்பல்கள் பாகிஸ்தான் கடல் எல்லையை ஒட்டிய பகுதி வழியாக செல்கின்றன.

இவ்வளவு ஏன். சீனாவின் நீர்முழ்கி கப்பல் கூட நுழைந்திருக்கலாம். பிற நாட்டு கப்பல்களை இந்தியாவினுடையது என தவறாக தெரிவித்துள்ளது. இதுபோன்ற, தேவையற்ற போர்பதற்றத்தை ஏற்படுத்தும் செய்திகள் வெளியிடுவதை அந்நாடு நிறுத்தி கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

152
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: