புதிய ரூ.2000 நோட்டை ஸ்கேன் செய்தால் மோடி உரையை கேட்கலாம்

பெங்களூரு : மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள ரூ.2000 மற்றும் 500 நோட்டை நோட்டுக்களை மொபைல் போன் ஆப்ஸ் மூலம் ஸ்கேன் செய்தால், ரூ.500, 1000 நோட்டுக்களை வாபஸ் பெற்றதாக பிரதமர் மோடி ஆற்றிய அறிவிப்பு குறித்த உரை ஒளிபரப்பாகிறது.ரூ.500, 1000 நோட்டுக்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி, நவம்பர் 8 ம் தேதி அறிவித்தார். இதுகுறித்து விரிவாக நாட்டு மக்களுக்கு அவர் உரை நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து நவம்பர் 11ம் தேதி பெங்களூருவைச் சேர்ந்த பர்ரா ஸ்கல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் புதிய மொபைல் ஆப்ஸ் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ‘ மோடி கி நோட்டு (Modi Keynote)’ என்ற இந்த ஆப்சை கூகுள் பிளே ஸ்டோரில் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.இந்த ஆப்சை பயன்படுத்தி, புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரூ.2000 மற்றும் 500 நோட்டுக்களின் பின்புறம் உள்ள பாதுகாப்பு இழை( security thread) ஐ ஸ்கேன் செய்தால், உங்கள் மொபைல் போனில் நவம்பர் 8 ம் தேதி பிரதமர் மோடி நிகழ்த்திய உரையின் வீடியோ பதிவு ஒளிபரப்பாகும்.
இன்டர்நெட்டில் உள்ள புதிய நோட்டுக்களின் படங்களை, உங்கள் மொபைல் போனில் உள்ள ஆப்ஸ் மூலம் ஸ்கேன் செய்தாலும் பிரதமரின் மோடி ஒளிபரப்பாகும்.இதுவரை 5000 க்கும் மேற்பட்டோர் இந்த மொபைல் போன் ஆஸ்சை டவுன்லோட் செய்துள்ளனர். இந்த புதிய மொபைல் ஆப்ஸ் குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

343
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: