பைரவாவிற்கு கடைசி நேரத்துலயா…. சோதனை வரனும்

சென்னை : பரதன் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில், விஜயா புரொடக்ஷன் சார்பில் வெங்கட்ராம ரெட்டி, பாரதி ரெட்டி தயாரித்து விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பைரவா படம் நாளை வெளிவருகிறது. படம் வெளியாகும் கடைசி நேரத்தில் படத்தின் தலைப்பு என்னுடையது அதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த ஜி.பொருள்தாஸ் என்பவர் வழக்கு தொர்ந்துள்ளார். சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

‘பைரவா’

நாய் ஒன்றின் வீரச்செயல் மற்றும் சாதனையை அடிப்படையாக கொண்ட ஒரு கதையை எழுதி அதனை திரைப்படமாக தயாரிக்க முடிவு செய்து, ஆரம்பக்கட்ட பணிகளை எல்லாம் செய்துள்ளேன்.
இந்த கதைக்கு ‘பைரவா’ என்ற தலைப்பும் வைத்தேன். தென்னிந்திய திரைப்படம் மற்றும் டி.வி. தொடர் தயாரிப்பாளர் கில்டு என்ற அமைப்பில் உறுப்பினராக நான் இருப்பதால், அந்த அமைப்பிடம் ‘பைரவா’ தலைப்பை கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி 29-ந் தேதி பதிவு செய்தேன். இந்த பதிவை புதுப்பிக்கவும் செய்துள்ளேன்.

விஜயா புரொடக்ஷன் நிறுவனதுக்கு நோட்டீசு

இந்த நிலையில், நடிகர் விஜய், கீர்த்திசுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள படத்துக்கு ‘பைரவா’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தை விஜயா புரொடக்ஷன் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் குறித்து கடந்த டிசம்பர் மாதம் வெளியான விளம்பரத்தை கண்டு அதிர்ச்சியடைந்தேன். உடனடியாக பைரவா என்ற தலைப்பை பதிவு செய்துள்ள விவரங்களை எடுத்துக்கூறி, அந்த தலைப்பை மாற்றிக் கொள்ளும்படி விஜயா புரொடக்ஷன் நிறுவனதுக்கு நோட்டீசு அனுப்பினேன். என்னுடைய குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து பதில் நோட்டீசு அனுப்பியுள்ளனர். எனவே, ‘பைரவா’ என்ற தலைப்பை பயன்படுத்த தடைவிதிக்கவேண்டும்.

இடைக்கால தடை எதுவும் விதிக்க முடியாது

இவ்வாறு மனுவில் பொருள்தாஸ் கூறியிருந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் ‘மனுதாரர் கடைசி நேரத்தில் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். எதிர் தரப்பின் கருத்தை கேட்காமல், இடைக்கால தடை எதுவும் விதிக்க முடியாது. அதனால், இந்த வழக்கு விசாரணையை 12-ந் தேதிக்கு (நாளை) தள்ளிவைக்கிறேன். இதுகுறித்து எதிர்மனுதாரர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

544
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: