மன்னிக்க மாட்டேன்… மாதவனை மன்னிக்க மாட்டேன்… கவுதம் சொல்றார்…

சென்னை: அந்த விஷயத்திற்காக மாதவனை நான் என்றும் மன்னிக்கவே மாட்டேன் என்று சொல்லியிருக்கார் இயக்குனர் கவுதம் மேனன். எதற்காக இந்த கோபம்…

கோலிவுட்டில் இயக்குனர்களுக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் ஒரு சிலருக்கு மட்டும்தான். அந்த ஒரு சிலரில் ஒருவர் கவுதம் மேனன். இவர் தான் மற்றொரு இயக்குனரை பார்த்து பயந்த சம்பவத்தை சொல்லியிருக்கார். இவரது முதல் படமான மின்னலே படத்தின் கதையைக் கேட்ட மாதவன், இதை மணிரத்னம் சார் ஓகே செய்தால்தான் நான் நடிப்பேன் என்று சொல்லிவிட்டாராம்.

மணிரத்னத்தின் தீவிர ரசிகரான கவுதம் அவரிடம் கதை சொல்ல ரொம்பவே பயந்து போய்விட்டாராம்.
ஒரு மணிநேரத்தில் கதை சொல்லி முடித்த கவுதமுக்கு இன்னொரு ஷாக். மணிரத்னமுக்கு இந்த கதை சுத்தமாக பிடிக்கவில்லை. இருந்தாலும் மாதவன் ஹீரோவாக நடித்து அந்த படம் செம ஹிட் அடித்தது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

இதை ஒரு பேட்டியில் சொன்ன கவுதம் இந்த ஒரு விஷயத்துக்காக நான் மாதவனை எப்போதும் மன்னிக்க மாட்டேன் என ஜாலியாக சொல்லியிருக்கார்.

267
-
100%
Rates : 1

Leave a Reply

%d bloggers like this: