மிக அமைதியான நாடு எது தெரியுமா..?

சிரிய பிரச்னை, தீவிரவாதிகள் அமைப்புகளின் எழுச்சி, அகதிகள் விஷயத்தில் நிலவும் ஸ்திரமற்ற தன்மை என்ற காரணங்களால் உலக அமைதி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறது 2016க்கான ‘க்ளோபல் பீஸ் இன்டக்ஸ்’. ‘இன்ஸ்ட்டியூட் ஃபார் எக்கனாமிக்ஸ் & பீஸ்’ என்ற அமைப்பால் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

மற்றவர்களின் உரிமைகளை ஏற்றுக் கொள்ளுதல், ஊழலின் அளவு, கருத்து சுதந்திரம், நன்கு செயல்படும் அரசு என்ற அடிப்படைகளில் உலகின் அமைதியான நாடுகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இப்படி தயாரிக்கப்பட்ட பட்டியலில், ஐஸ்லாந்துக்கு தான் முதலிடம். அதைத் தொடர்ந்து டென்மார்க், ஆஸ்திரியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் உள்ளன.
சிரியா தான் இந்த பட்டியலில் கடைசி இடம் பிடித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் தான் மிக அமைதியற்ற நிலைமை நிலவுவதாகவும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் நாடுகளில் அமைதி பரவலாக உள்ளது எனவும் கூறுகிறது இந்த ஆய்வு.

191
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: