மோடி நடவடிக்கையால் கடந்த 10 நாட்களாக சாமனிய மக்கள் பாதிப்படைந்துள்ளனர் – திருமா

சென்னை : ரூபாய் நோட்டு பிரச்சனையால் பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கையால் நாட்டில் கடந்த 10 நாட்களாக மிசா நிலை நிலவுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று இந்திராகாந்தி நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், “ராகுல்காந்தி பிரதமர் ஆவதற்கும், காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்பதற்கும் பிரதமர் மோடி வாசலை திறந்துள்ளார்” என்று கூறினார்.

இதனையடுத்து திருமாவளவனின் பேச்சுக்கு பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தாரராஜன் கண்டனம் தெரிவித்தார்.
இலங்கையில் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை மறந்துவிட்டு காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக திருமாவளவன் பேசியுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், உள்நோக்கத்துடன் எதனையும் பேசவில்லை என்று திருமாவளவன் தன்னுடைய பேச்சுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:-

தமிழிசை எனக்கு விடுத்த கண்டனத்த வரவேற்கிறேன். பாரதிய ஜனதா கட்சியின் அவல நிலையைத் தான் காங்கிரஸ் கூட்டத்தில் சுட்டிக் காட்டினேன். தமிழிசை மாநில தலைவராக உள்ளதால் கட்சியின் கொள்கையை ஆதரித்து விசுவாசமாக பேசுகிறார். ரூபாய் நோட்டுகள் பிரச்சனையால் தமிழிசையும் தான் பாதிக்கப்பட்டுள்ளார். பிரதமரின் நடவடிக்கையால் நாட்டில் கடந்த 10 நாட்களாக மிசா நிலை நிலவி வருகின்றனர். சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

190
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: