யுவராஜ்சிங்கிற்கு இன்று திருமணம்.. காக்டெய்ல் பார்ட்டியில் கோஹ்லி படை குதூகலம்!

சண்டிகர்: இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் மற்றும் பாலிவுட் நடிகை ஹசல் கீச் நடுவே இன்று திருமணம் நடைபெற உள்ள நிலையில், நேற்று இரவு நடைபெற்ற கோக்டைல் பார்ட்டியில் விராட் கோஹ்லி உள்ளிட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள் பெரும்பாலானோர் பங்கேற்றனர்.
மொகாலியில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியை நான்காவது நாளிலேயே வென்றது இந்தியா. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் கோஹ்லி, இன்று இரவு யுவராஜ்சிங் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க செல்ல உள்ளோம். 4வது நாளிலேயே போட்டி முடிவடைந்துவிட்டதால், இந்திய வீரர்கள் ரிலாக்சாக திருமண நிகழ்வில் பங்கேற்க முடியும். கூடுதல் நேரத்தை திருமண வீட்டில் செலிவட முடியும் என்றார்.
Source: tamil.oneindia.com
கோஹ்லி படை
அதேபோல, விராட் கோஹ்லி தனது படையுடன் மொகாலியின் அருகேயுள்ள சண்டிகருக்கு சென்று சேர்ந்தார். அங்குள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் யுவராஜ்சிங் மற்றும் அவரது காதலி ஹசல் கீச் இருவரும் நேற்று விருந்தினர்களுக்கு கோக்டெய்ல் பார்ட்டி கொடுத்தனர். அதில் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றனர்.
விலை உயர்ந்த ஆடைகள்
யுவராஜ்சிங் தாடியுடன் காட்சியளித்தார். அவர், கறுப்பு வண்ண பண்டகாலா வகை ஜாக்கெட் அணிந்திருந்தார். வெள்ளை சுடிதார் டைப் பேண்ட், இரு கறுப்பு ஜூட்டிகள் அணிந்திருந்தார். ஹசல் கீச், ஸ்லீவ்லெஸ் பிளைன் பனாரஸ் பார்டர் போட்ட, வெள்ளை நிற லெகன்கா அணிந்திருந்தார். அவரது ஆடைகளில் கோடா வேலைப்பாடு அதிகம் செய்யப்பட்டிருந்தது.

போட்டோ போஸ்கள்
விராட் கோஹ்லியும் கூட, பைஜாமா போன்ற ஆடையுடன் திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். முரளி விஜய், பார்த்திவ் பட்டேல், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், நெக்ரா, முகமது கைப், கபில்தேவ் போன்ற பிரபலங்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். போட்டோக்களுக்கு விதவிதமாக போஸ் கொடுத்தனர்.
இன்று திருமணம்
மாடல் அழகியான ஹசல் கீச், பாடிகாட் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். சண்டீகரிலுள்ள ஹோட்டலில் இன்று யுவராஜ்-ஹசல் கீச் திருமண வைபவம் நடைபெற உள்ளது. இதில் உறவினர்கள் திரளாக பங்கேற்பர் என கூறப்படுகிறது.

176
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: