ரூ.1000 விலையில் ஜியோ ஸ்மார்ட்போன்; அடுத்த ஆஃபர் ரெடி

புதுடில்லி: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அடுத்த அதிரடி ஆஃபராக 1000 ரூபாய் விலையில் அன்லிமிடட் வீடியோ காலிங் மற்றும் வாய்ஸ் காலிங் வசதியுடன் கூடிய புதிய ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்த உள்ளது.
குறைந்த விலையில் ஸ்மார்ட் போன்தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 4ஜி சிம்மை கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தியது. 3 மாதங்களுக்கு இலவசமாக 4ஜி இன்டர்நெட் சேவையை பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டதால் ஜியோ சிம் வாங்குவதற்கு மக்கள் குவிந்தனர். இதனால், அந்நிறுவனத்திற்கு குறுகிய நாட்களுக்குள்ளாகவே 25 மில்லியன் வாடிக்கையாளர்கள் கிடைத்தனர்.ஜியோவின் வருகை தொலைதொடர்பு துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
இது போட்டி நிறுவனங்களுக்கு கடும் சவாலாக அமைந்தது. இந்நிலையில், ஜியோவின் அடுத்த அதிரடி ஆஃபராக 1000 ரூபாய் விலையில் அன்லிமிடட் வீடியோ காலிங் ம்ற்றும் வாய்ஸ் காலிங் வசதியுடன் கூடிய புதிய ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த போன் 2017 ம் ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் 1000 ரூபாயில் 4ஜி ஸ்மார்ட் போன் கிடைக்கும்.

162
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: