ரூ.20,000 ஐ சில்லரையாக கொடுத்த வங்கி

புதுடில்லி : டில்லியில் வங்கி ஒன்றில் பணம் எடுக்கவந்த வாடிக்கையாளர் ஒருவருக்கு ரூ.20,000 க்கு 10 ரூபாய் நாணயங்கள் அளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.டில்லியை சேர்ந்த இம்தியாஸ் ஆலம் என்பவர் தனது கணக்கில் இருக்கும் பணத்தில் இருந்து ரூ.20,000 எடுக்க சென்றார். வங்கியில் அரைமணிநேரத்திற்கு மேலாக காத்திருந்தும் அவரால் பணம் பெற முடியவில்லை. இதனால் இம்தியாஸ், வங்கி அதிகாரிகளை அணுகி உள்ளார். அவருக்கு பதிலளித்த வங்கி அதிகாரிகள், ரூபாய் நோட்டுகள் கையிருப்பில் இல்லை எனவும், அவசரத் தேவையாக இருந்தால் பத்து ரூபாய் நாணயங்களாக பெற்றுச் செல்லலாம் எனவும் கூறி உள்ளனர்.இதனால், மணி கணக்கில் காத்திருப்பதை விட நாணயங்களாக பணம் பெற்றுச் செல்லலாம் என முடிவு செய்து, இம்தியாஸ் நாணங்களை பெற்றுக் கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதனால் ரூ.20,000 க்கு பத்து ரூபாய் நாணயங்களாக எடுத்துச் சென்றுள்ளார். இந்த நாணயங்களின் எடை 15 கிலோ ஆகும். ரூ.20,000ஐ சில்லரையாக வைத்திருக்கும் இம்தியாஸ் ஆலமின் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

396
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: