வங்கிகளில் ரூ.15 லட்சம் கோடி டிபாசிட் ஆகும் : மத்திய அரசு தகவல்

புதுடில்லி: வங்கிகளில் இதுவரை ரூ.6 லட்சம் கோடி டிபாசிட் ஆகியுள்ளதாக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது. மேலும் ரூ.15 லட்சம் கோடி டிபாசிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறியுள்ளது.நோட்டீஸ்கறுப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுக்களை ஒழிக்க மத்திய அரசு அதிரடியாக ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களை வாபஸ் பெற்றுக்கொண்டது. இதனை எதிர்த்து பல மாநில ஐகோர்ட்களில் பலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளுக்கு தடை விதிக்க வேண்டும். அனைத்து வழக்குகளையும் சுப்ரீம் கோர்ட்டிற்கு மாற்ற வேண்டும் என மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட், விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது.
வழக்கு தொடர்ந்தவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.கேள்வி: அப்போது நீதிபதிகள் கூறுகையில், இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க விரும்பவில்லை. பல்வேறு பிரச்னைகள் உள்ளன. மக்கள் சம்பந்தப்பட்ட ஐகோர்ட் மூலம் நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம். என்றனர்.

தொடர்ந்து, மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்திருக்கும். தற்போது நிலைமை என்ன? இதுவரை எவ்வளவு பணம் டிபாசிட் செய்யப்பட்டுள்ளது என அட்டர்னி ஜெனரலிடம் கேள்வி எழுப்பினர்.6 லட்சம் கோடி டிபாசிட்: அப்போது அட்டர்னி ஜெனரல் முகுல் ரோகத்கி கூறுகையில், முன்னரை விட தற்போது நிலைமை சீரடைந்துள்ளது. வங்கிகளில் இதுவரை ரூ.6 லட்சம் கோடிக்கும் மேல் டிபாசிட் செய்யப்பட்டுள்ளது.

இறுதிக்கெடு முடியும் போது ரூ.15 லட்சம் கோடி டிபாசிட் ஆகும் என எதிர்பார்க்கிறோம். டிஜிட்டல் வழியாக பணப்பரிமாற்றம் செய்யப்படுவது அதிகரித்துள்ளது. நிலைமைகளை மத்திய அரசு தினசரி கண்காணித்து வருகிறது. உள்ள கறுப்பு பணம் கள்ள நோட்டுக்களை ஒழிக்கவே அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

மத்திய அரசு நடவடிக்கைக்கு பிறகு நிலைமையை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு பலனளிக்கும் வகையில் பல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய ரூபாய் நோட்டுக்கள் பற்றாக்குறை ஏதுமில்லை. புதிய நோட்டுக்களை கொண்டு செல்வதில் தான் பிரச்னை உள்ளது.

மக்கள் பீதியடைய வேண்டாம். சந்தையில் பணப்பரிமாற்றம் என்பது ஜிடிபியில் 4 சதவீதம் மட்டுமே இருக்க வேண்டும் என்பது பொது விதி. ஆனால், இந்தியாவில் 12 சதவீதமாக உள்ளது. நாடு முழுவதும் பல கோர்ட்களில் ரூபாய் நோட்டு வாபசிற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதனை சுப்ரீம் கோர்ட் அல்லது ஒரே ஐகோர்ட்டிற்கு மாற்ற வேண்டும் எனக்கூறினார்.இந்த வழக்கு மீதான அடுத்த கட்ட விசாரணையை டிசம்பர் 2ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.

193
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: