2020ல் மூவாயிரம் மாணவர்களுக்கு படிப்பு உதவி! – நடிகர் சூர்யா

2020ம் ஆண்டுக்குள் அகரம் அறக்கட்டளை சார்பில் 3000 மாணவர்கள் படித்து முடித்து வெளியே வருவார்கள் என்றார் நடிகர் சூர்யா.
ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் கூட்டத்தில் ஒருவன். எஸ்ஆர் பிரபு தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா கலந்து கொண்டு பேசுகையில், “இயக்குநர் ஞானவேலின் உழைப்பு மிகவும் ஆழமான உழைப்பாகும்.
எங்களுடைய அகரம் குழுமத்துக்கு அப்பெயரை வழங்கியது அவர் தான். எங்களுடைய அகரத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம் ஞானவேல்தான். அவரல்தான் எனக்கு இந்த சமூகத்தில் நடிகன் என்பதை தாண்டி நிறைய நல்ல பெயர் கிடைத்தது. 1500 மாணவர்கள் இப்போது அகரத்தின் மூலம் படித்துள்ளர்கள். வருகிற 2020ல் 3000க்கும் மேலான மாணவர்கள் படித்து முடித்து வெளியே வருவார்கள்.
நான் கூட்டத்தில் ஒருத்தன் திரைப்படத்தைப் பார்த்துவிட்டேன். மிகச் சிறந்த படம். இது நிச்சயம் உங்கள் அனைவரையும் யோசிக்க வைக்கும் படமாக இருக்கும். அசோக் செல்வன் இந்த கதைக்கு கண கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். சிறு வயதில் இருந்து அவரைப் பார்த்து வருகிறேன். அவருடைய நடிப்பு மிகவும் அருமையாக உள்ளது.
நிவாஸ் கே பிரசன்னாவின் நடிப்பு நிச்சயம் படத்துக்கு பலம் சேர்க்கும். அவருடைய இசையே வேறு அந்த இசை மிக துல்லியமான இசை. சமீபத்தில் நான் பார்த்ததில் மிக சிறந்த லைவ் ஷோ இவர் இப்போது நடத்தியதுதான், என்றார்.
சூர்யா
கண்ணோட்டம்
சுயவிவரம்
ரசிகர் கருத்து
ரசிகர் படங்கள்
புகைப்படங்கள்
வீடியோக்கள்
புதிய படங்கள்
வால்பேப்பர்

189
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: